தொன்மையின் திறவுகோல் ...
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" - எனும் கணியன் பூங்குன்றனாரின் வார்த்தைக்கு இணங்க அனைத்து உறவுகளுக்கும் மனமார்ந்த வணக்கம் . மனித இனம் தோன்றிய காலம் முதல் இன்றுவரை பல்வேறு மாறுபாடுகளை சந்தித்துக் கொண்டுதான் உள்ளோம் . ஆதிமனிதன் உணவை சமைக்க நெருப்பை பயன்படுத்தியது முதல் இன்றைய மனிதன் உணவை சமைக்க மின்சாரத்தை பயன்படுத்துவது வரை பல்வேறு பரிணாமங்களை அடைந்துள்ளோம்.
அன்றைய மனிதன் தங்களின் கருத்துக்களையும் உணர்வுகளையும் உடல் அசைவுகள் மூலம் தெரிவித்து வந்தான் . காலங்கள் நகர்ந்தன அதை விடுத்து மொழி எனும் கருவிகளை பயன்படுத்த தொடங்கினான் . மொழியின் வளர்ச்சி நாகரீகத்தின் வளர்ச்சி என்று கூறுவர் . ஆம் , மொழி நம்முள் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது . மொழி பயன்பாட்டிற்கு முன்பு தன் சொல்ல விரும்புவதையும் சாதித்ததாக எண்ணிய நிகழ்வுகளையும் ஓவியம் மூலம் பாறைகளில் வரைந்தும் குகைகளில் தீட்டியும் வைத்தான் . பின்பு பேச்சுக்கள் தோன்றின அதன் பின்பு படிப்படியாக எழுத்துக்களும் தோன்றத் தொடங்கின.
மொழிகளே ஒவ்வொறு நாகரிக வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றின . நாகரீகங்கள் ஆறுகளை மையமாக வைத்தே தோன்றியது என்பர் . அன்றைய ஆதிமனிதன் உணவை மையமாக வைத்தே தன் வாழ்க்கை பயணத்தை நகர்த்தினான் . பிறகு சிந்திக்கத் தொடங்கிய மனிதன் தன்னை வழிநடத்த தலைவன் வேண்டும் என எண்ணினான் . இதற்கு முன்பே மொழிகள் தோன்றி ஒரு குறிப்பிட்ட பரிமாணத்தை எட்டு இருந்தது . தன்னுடைய கருத்துக்களையும் தலைவனின் அரிய பல செயல்களையும் கல்லில் வடிக்க தொடங்கினான் . காலப்போக்கில் ஓலைச்சுவடிகளையும் , அவன் பயன்படுத்திய பொருட்களையும் , சுடு மணலையும் எழுதுவதற்காக பயன்படுத்தினான் . இன்றைய காலத்தில் நாம் பல்வேறு மாறுதல்களை அடைந்துள்ளோம் .
ஆதி காலகட்டத்தில் பல மொழிகள் தோன்றி இருந்தாலும் , தனக்கென தனி சிறப்பையும் , இலக்கணத்தையும் கொண்ட மொழியாக தமிழ் அப்போதே தோன்றியிருந்தது . ஆனால் இப்போது பயன்படுத்தப்படுகின்ற எழுத்து வடிவம் அப்போது கிடையாது . அப்போது பயன்படுத்திய எழுத்து வடிவத்தில் குறிப்பிடத்தகுந்த எழுத்து வடிவம் எதுவென்றால் " தமிழி வடிவமே" . தமிழி எனும் எழுத்து வடிவம் இப்போதும் பல்வேறு மொழிகளில் பயன்படுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தமிழி எழுத்து வடிவம் 1500 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்டது என்பர் . கல்வெட்டில் பொறிக்கப்பட்ட தெளிவான வடிவம் கொண்ட எழுத்து வடிவம் தமிழியே . எழுத்துக்கள் மிக எளிமையாகவும் கருத்துக்களை வெளிப்படுத்துவதாகவும் இருந்தன .
இந்த வலைத்தளம் உருவாக்கியதன் நோக்கம் , எழுத்து வடிவத்தை அறிந்து , அன்றைய மக்களின் நிலைப்பாட்டையும் , அவர்களின் கருத்து வெளிப்பாட்டையும் உணர்வுகளையும் புரிந்து அறிந்து கொள்வதற்கே , இதை அறிமுகம் செய்தோம் . கல்வெட்டுகளில் பயன்படுத்தபட்ட தமிழி எழுத்தை அறிந்து கொள்வதே எங்கள் மைய நோக்கம் . ஏனென்றால் இந்த எழுத்து வடிவங்கள் ஆய்வாளர்கள் மட்டுமே அறிந்ததாக உள்ளது . இதை பற்றி அனைவரும் அறிந்து தமிழியின் பெருமையையும் அதன் தொன்மையையும் உணர்ந்து கொள்ள வேண்டும் .
இந்த வலைத்தளம் தமிழரின் வரலாற்றையும் , அது பயன்படுத்தப் பட்ட காலம் பற்றியும் , அப்போது வாழ்ந்த மக்களின் வாழ்வியல் முறை பற்றியும் , கல்வெட்டுகளைப் பற்றியும் , தமிழி எழுத்துக்களைப் பற்றியும் , இன்றைய சூழலில் அதன் நிலை பற்றியும் , நம் தொன்மை பற்றியும் அறிந்து கொள்ளவே அறிமுகப்படுத்தி உள்ளோம்.
தமிழ் எழுத்துக்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றியது.மனிதன் பிற மனிதனுடன் தொடர்பு கொள்ள முக்கிய கருவி எழுத்துக்கள். பல்வேறு கருவிகளைக் கொண்டு வந்து பயன்படுத்தினாலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றி மிகவும் எளிய நடையில் பெருமை பட்டு வருகிறது தமிழ் மொழியின் எழுத்துக்கள். தமிழ் எழுத்துக்கள் எவ்வாறு தோன்றியது? எங்கு தோன்றியது? இவற்றைப் பற்றி தொல்பொருள் ஆய்வாளர்கள் பல அகழாய்வு ஆராய்ச்சிகள் மேற்கொண்டு அதற்கான விடைகளை பகிர்ந்தார்கள். இவற்றின் வரலாற்றை காண்போம்.....தமிழ் எழுத்துக்களின் இப்பயணம் தமிழக நிலப்பரப்பில் மட்டும் தொடங்கியது இல்லை என்பது வியக்கத்தக்க ஒன்றாகும். கிர்னர் என்னும் மலைத்தொடர் குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ளது. இப்பகுதி சீனர்களையும் இந்துக்களையும் புனித தொடரில் இணைக்கும் பாலம் ஆகும்.இங்குள்ள மலை அடிவாரத்தில் உள்ள பாறைகளில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் கண்டறியபட்டன. அவைகள் புதிர்கள் மற்றும் புராணங்கள் நிறைந்ததாக அமைந்தது.குஜராத் மட்டுமில்லாமல் ஆந்திரா,கர்நாடகா,ஒடிசா, பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற இடங்களிலும் கல்வெட்டுக்கள் கண்டறியப்பட்டன. அகழாய்வு மற்றும் தொல்லியல் ஆராய்ச்சி ஆய்வுகளில் ஈடுபட்டனர்.
முகமது பின் துக்ளக் என்னும் அரசர் தனது ஆராய்ச்சியை முதலில் தொடங்கினார் . அவரது காலம் கிமு 13ஆம் நூற்றாண்டு . அவரின் ஆராய்ச்சியின் போது அவரால் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு எழுத்துக்கள் மிகவும் கடினமாக இருந்ததால் அவரால் அதனை படிக்கமுடியவில்லை . இவரை தொடர்ந்து கிபி பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரிட்டிஷ் அரசர்கள் மற்றும் அகழாய்வு ஆய்வாளர்கள் தமிழ் நாகரீகம் பற்றி அறிந்துகொள்ள மிகவும் ஆர்வம் செலுத்தினார்கள் 1784 ஆம் ஆண்டு வில்லியம் ஜோன்ஸ் என்னும் ஆய்வாளர் கொல்கத்தா நாட்டைச் சேர்ந்தவர் ஏசியாட்டிக் சொசைட்டி (Asiatic Society)என்னும் ஆராய்ச்சி மையம் மூலம் கிழக்காசிய நாடுகளுடைய வரலாற்றையும் எழுத்துக்கள் பற்றிய ஆய்வும் தொடங்கப்பட்டது .
ஜேம்ஸ் பிரின்செப் என்னும் அகழாய்வு ஆய்வாளர் கல்வெட்டு பற்றி படிக்க முயற்சி செய்தார். இவர் முதலில் ஆய்வு செய்த மொழி சமஸ்கிருதம் ஆகையால் பலரும் சமஸ்கிருத மொழியை முதலில் வந்துள்ளது என்று நினைத்தார்கள். பின்பு பல ஆராய்ச்சிகள் மூலமே தமிழ்மொழியே மிகவும் தொன்மையான மொழி என்று அறிந்தார்கள். ஜேம்ஸ் பிரின்செப் பார்த்த கல்வெட்டுகளில் உள்ள எழுத்துக்கள் மிகவும் வித்தியாசமாக தோன்றியது.அதில் உள்ள எழுத்துக்கள் சமஸ்கிருதம் போன்று காணப்படவில்லை. ஏனென்றால் சமஸ்கிருத மொழியில் மெய்யெழுத்துக்கள் அருகாமையில் வராது. ஆனால் அவர் பார்த்த கல்வெட்டில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களில் மெய்யெழுத்துக்கள் அருகில் இருப்பதை கண்டறிந்தார். இதன் மூலம் தமிழ் எழுத்துக்கள் 1500 ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றியுள்ளது என அறியப்பட்டது. கிறிஸ்டியன் லெசன் இவர் தொல்பொருள் அடிப்படையை மையமாய் கொண்டு கல்வெட்டு எழுத்துக்களை படிக்க ஆரம்பித்தார். இவர் கண்ட நாணயத்தின் ஒரு பக்கம் கிரேக்க எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. மற்றொரு பக்கம் உள்ள எழுத்துக்கள் இவரால் படிக்க முடியவில்லை. தனக்கு தெரிந்த கிரேக்க எழுத்துக்களை வைத்து மற்றொரு பக்கம் இருந்த எழுத்துக்களை கண்டறிந்தார். கிரேக்க எழுத்துக்களுடன் இந்த எழுத்துக்களை ஒப்பிட்டு அதன் ஒலிகளை கண்டுபிடித்தார். அவரின் தொடர் முயற்சியால் கல்வெட்டில் உள்ள எழுத்துக்கள் பிராமி எழுத்துக்கள் என கண்டறியப்பட்டது. பண்டைய கால நூல்களான சமவேங்க சுத்தம் எனும் சமண நூலில் பிராமி எழுத்து பம்மி என முதலில் காணப்பட்டது. அதுமட்டுமில்லாமல் லலிதவிஸ்தரம் எனும் நூலில் பிராமி எழுத்து அறியப்பட்டது. தமிழகத்திலும் சிறிய மாறுதல்களுடன் கிடைத்தது.
அசோகர் கல்வெட்டுகளில் இருந்த பிராமி எழுத்துக்கள் 2300 ஆண்டு கால வட இந்திய வரலாற்றை வெளிக்கொண்டு வந்தது. ஆனால் அதே பிராமிய எழுத்துகளை ஒத்த கல்வெட்டுகள் அசோகர் ஆட்சி எல்லைக்கு அப்பாற்பட்ட தமிழகத்திலும் சிறிய மாறுதல்களுடன் கிடைத்தது .இதைப்பார்த்து 2300 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் மொழி இருந்தது என்பதை அறிந்த ஆய்வாளர்கள் ஆச்சரியப்பட்டனர்.
தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் முதல் முதலில் ராபர்ட் சீவல் என்பவர் மதுரை மாங்குளம் என்னும் இடத்தில் இரண்டு கல்வெட்டுகளை கண்டறிந்தார்.அதன்பிறகு பிராமி போன்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் தமிழகத்தில் பல இடங்களில் காணப்பட்டது.பிராமிய எழுத்துக்களை படிப்பதற்கான பட்டியலைப் பிரின்செப் வெளியிட்ட பிறகு இங்கு உள்ள ஆராய்ச்சியாளர்களும் அதில் உள்ள செய்திகளை படித்தனர்.
அதன் வரையில் இந்தியாவில் காணப்பட்ட கல்வெட்டுகள் பிராகிருதம் என்னும் அர்த்தத்தை கொடுத்தது ஆனால் தமிழகத்தில் காணப்பட்ட பிராமியக் கல்வெட்டுகள் பிராகிருதம் என்னும் அர்த்தத்தைக் கொடுக்க வில்லை.
அதன் பிறகு இதை படிக்க ஆரம்பித்த கிருஷ்ண சாஸ்திரி என்னும் ஆய்வாளர் இது வட நாட்டில் உள்ள புத்த மொழியான பாலி மொழியாக இருக்கக்கூடும் என கணித்தார். ஆனால் அவற்றை ஆராய்ச்சி செய்யும் பொழுது அது பாலி அழுத்தத்தைக் கொடுக்கவில்லை. ஆதலால் தமிழ்நாட்டில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் பாலியுமில்லை பிராகிருதமும் இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.
இவரைத் தொடர்ந்து சுப்பிரமணியம் என்னும் ஆய்வாளர் கல்வெட்டுகளில் உள்ள எழுத்துக்களில் சில தமிழ் குறிப்பு எழுத்துக்களை கண்டறிந்தார். சிறப்பு ழகரம் வல்லின றகரம் முதலிய குறிப்பு எழுத்துக்களை கண்டறிந்தார். இதனை ஒரு கருத்தரங்கத்தில் உரைத்த பொழுது அனைவரும் இவரது கருத்துக்கு எதிராக நின்றனர்.அதன் பின்னர் வந்த ஐராவதம் என்னும் அறிஞர் தமிழ் கல்வெட்டுகளில் உள்ள தமிழ் எழுத்துக்களை படித்து காண்பித்த பின்னர் அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.
இக்கல்வெட்டுகள் அனைத்தும் அசோகர் காலத்தில் கிடைக்கப் பெற்றதால் இதில் உள்ள பிராமி எழுத்துக்கள் அசோகர் காலத்தை சேர்ந்தவையா இல்லை அதற்கும் முன்னர் தோன்றியவையா என்பதை அறிய முற்பட்டனர்.இக்கல்வெட்டுகள் அனைத்தும் சமண படிக்கைகளில் காணப்பட்டதால் இவை சமண காலங்களில் தோன்றியவை ஆக இருக்குமோ என்று கணித்தனர்.
ஆனால் சமண காலங்களுக்கு முன்பாகவே தமிழகத்தில் வாழ்ந்த தமிழர்களுக்கு தமிழி எழுத்துகளின் வரிவடிவம் தெரிந்திருந்தது.இதை அவர்கள் தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானைகளை பார்த்த பின்னர் உறுதிப்படுத்தினர்.தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை தமிழகத்தில் மட்டுமல்லாமல் எகிப்து தாய்லாந்து போன்ற நாடுகளிலும் காணப்பட்டது.
தமிழ் எழுத்துக்களில் மெய்யெழுத்துக்கள் உயிரெழுத்துக்கள் என்று வித்தியாசமான எழுத்துக்கள் காணப்படும். ஆனால் மாங்குளத்தில் கண்டறியப்பட்ட கல்வெட்டுகளில் புள்ளியில்லா எழுத்துக்கள் காணப்பட்டன.சோழர் காலக் கல்வெட்டுகளில் கூட்டெழுத்துக்கள் காணப்பட்டன. ஆனால் நம் தமிழ் மொழியில் கூட்டெழுத்துக்கள் கிடையாது.இதன் பின்பு பல்வேறு ஆராய்ச்சிகளை செய்த பின்னர் அசோகர் காலத்தில் இருந்து தமிழ்மொழி வரவில்லை என்பதை அறிந்தனர்.
தமிழி மொழி எக்காலத்தில் தோன்றியது என்றும் சச்சரவை ராஜன் என்னும் ஆய்வாளர் தீர்த்து வைத்தார். அதன் வரையில் இந்தியாவில் பல்வேறு இடங்களில் பிராமிய கல்வெட்டுகள் கிடைத்தன. ஆனால் 2012ஆம் ஆண்டு புதுச்சேரியில் நடைபெற்ற அகழாய்வின் போது பெரும்பாலான தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்தன.பானை ஓடுகளில் இருந்த மண்ணடுக்குகளை வைத்து தமிழிமொழி எக்காலத்தில் தோன்றியது என்பதை ஆய்வின் மூலம் கண்டறிந்தனர்.
அதன் பின்னர் பொருந்தல் என்னும் இடத்தில் நடைபெற்ற அகழாய்வு ஆராய்ச்சியின் போது பானைகளில் கிடைத்த நெற்பயிரை ஆராய்ச்சி செய்த பொழுது தமிழி எழுத்துக்கள் கிமு ஐந்தாம் நூற்றாண்டில் தோன்றியவை என்பது உறுதி செய்யப்பட்டது.
பிற்காலத்தில் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகளின் மூலமாகவே தமிழி எழுத்துக்களில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. ஓலைச்சுவடியில் எழுதும் முறைக்கேற்ப தமிழி எழுத்துக்கள் வட்ட எழுத்துகளாக மாற்றமடைந்தன.தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் ஆந்திரா,ஒரிசா போன்ற பிற மாநிலங்களிலும் தமிழி எழுத்துக்கள் வட்ட எழுத்துகளாக மாற்றமடைந்தன.
ராஜராஜசோழன் காலத்தில் குற்றாலநாதர் கோவிலை சீரமைக்கும் பொழுது வட்ட எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களாக மாற்றமடைந்தது."இத்திருமலையை சீரமைக்கையில் கல்வெட்டு வட்டம் ஆகையால் தமிழாக படையெடுத்து".
ஆகவே பத்தாம் நூற்றாண்டிற்குப் பின்னர் மொத்த தமிழகத்திலும் தமிழ் மொழியை பின்பற்ற வட்ட எழுத்துக்கள் அழிந்துவிட்டன.
அதன்பின்னர் ஆட்சிபுரிய வந்த பல்லவர்கள் தென்பிராமியையும் பிராகிருதத்தையும் ஆட்சி மொழியாக பயன்படுத்தி வந்தனர். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள தமிழ் மக்களின் வட்டெழுத்து தாக்கத்தால் கிபி ஐந்தாம் நூற்றாண்டில் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக பல்லவர்களும் பின்பற்ற ஆரம்பித்தனர்.
இப்படியாகத்தான் தமிழி என்று சொல்லப்படும் தமிழ் பிராமி, வரி வடிவமானது. வட்டெழுத்தாகி பின்னர் பல்லவ கிரந்தத்தின் தாக்கம் பெற்று இப்பொழுது எழுதப்படும் தமிழ் எழுத்துக்களாக உருமாறி வந்தது.
ஆதிகால மனிதன் தன் கருத்துக்களை மொழியின் மூலம் தெரிவிக்க தொடங்கிய உடனே தான் தெரிவித்த முக்கிய கருத்துக்களை குறிப்பெடுக்க தொடங்கினார் . அவன் தன் கருத்துகளை குறிப்புகளாக பாறைகளிலும், பனையிலும், சுடு மண்ணிலும் எழுத்தாக எழுதத் தொடங்கினான் . இவ்வாறு கல்வெட்டுகள் தோன்றின.
கல்வெட்டுகளில் வரி எழுத்துக்களுக்கு பிறகு வந்த குறிப்பிடத்தகுந்த எழுத்து வடிவம் தமிழியே . ஆராய்ச்சியாளர்கள் தமிழி எழுத்து வடிவம் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளை கண்டறிந்துள்ளனர் . பாறைகளிலும் தமிழில் எழுத்து வடிவம் கண்டறியப்பட்டுள்ளது . இந்த கல்வெட்டுகள் 1500 ஆண்டுகள் பழமையானவை என கருதப்படுகிறது . இவ்வகையான தமிழி கல்வெட்டுகள் கிர்னர்,ஆந்திரபிரதேசம்,பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான் போன்ற பல இடங்களில் கண்டறியப்பட்டுள்ளது . இதிலிருந்து தமிழி எழுத்து வடிவம் பயன்படுத்தப்பட்ட இடங்களையும் இம் மொழி பயன்படுத்திய மக்கள் வாழ்ந்த இடங்களையும் நம்மால் அறிய முடிகிறது . இதிலிருந்து நம் தமிழர்களின் வணிகம்,பண்பாடு,அவர்கள் சென்ற இடங்கள் போன்ற பல செய்திகளை நம்மால் அறிய முடிகிறது .
அன்றைய மக்களின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்வதற்கு கல்வெட்டுகள் பெரிதும் துணைபுரிகின்றன . கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள செய்திகள் அன்றைய மக்களின் செயல்பாடுகளையும் அறிவியல் , மருத்துவம் , வேளாண்மை , ஆட்சி முறை , பழக்க வழக்கம் போன்ற பல்வேறு பிரிவுகளை விளக்குவதில் கல்வெட்டுகள் பெரிதும் துணைபுரிகின்றன.
தமிழி கல்வெட்டுகள் உலகின் பல்வேறு இடங்களில் கிடைக்கப்பெற்றுள்ளது . இதிலிருந்து அன்றைய தமிழர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் வணிக தொடர்பு வைத்திருந்தார்கள் என்று கூறுவதற்கு ஆதாரமாக உள்ளது . தமிழி கல்வெட்டுகள் தமிழ்மொழியின் தொன்மையையும் அது எடுத்தாளப்பட்ட விதத்தையும் நமக்கு உணர்த்துகிறது . தமிழர்கள் தமிழின் மீது எவ்வளவு பற்று வைத்திருந்தார்கள் என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது .
இன்றைய தமிழ் எழுத்துக்களை ஒப்பிடும்போது, தமிழி எழுத்து வடிவம் சற்று எளிமையாகவும் குறிப்பிட்ட வடிவம் அற்றதாகவும் காணப்பட்டது. பிறகு படிப்படியாக திரிந்து இப்பொழுது நாம் பயன்படுத்தும் தமிழ் எழுத்துக்களை உருவாயின. வீரமாமுனிவர், பொரியாரும் இப்பொழுது நாம் பயன்படுத்தும் எழுத்து வடிவத்தில் உள்ள மாறுபாடுகளை உருவாக்கின. தமிழி எழுத்து வடிவத்தை புகைப்படமாக பதிவிட்டு உள்ளோம். இதில் சில வார்த்தைகள் விடுபட்டு உள்ளது. அதற்கான எழுத்துக்கள் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை
படிக்க இயலாத அல்லது படிக்க விருப்பம் இல்லாமல் ஒலியின் மூலம் கேட்க விருப்பம் உள்ளவர்களுக்கு இந்த ஒலிப்பதிவை நாங்கள் தந்துள்ளோம்.
உங்களின் கருத்துக்களையும் விமர்சனங்களையும் கேள்விகளையும் இங்கு பதிவிடுக. உங்கள் அனைத்து கேள்விகளும் கருத்துக்களும் எங்களால் பரிசீலிக்கப்பட்டு உங்களுக்கான சரியான விடையை அளிக்கிறோம்.
உங்களின் கருத்துக்களை பதிவிட இந்த பொத்தானை அழுத்தவும்.
மின்னஞ்சல் : vaparun24012002@gmail.com
அலைபேசி எண் : 9361009437